தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் பெஃப்ரல் அமைப்பு முன்வைத்துள்ள அறிக்கை
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில், பெஃப்ரல் என்ற சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை மையத்துக்கு, 45 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடுகளின் கீழ், அரச அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் பெரும்பாலான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக, பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேர்தல் தொடர்பில் பொலிஸ் திணைக்களத்துக்கு கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் வன்முறை
இந்நிலையில், கடந்த தேர்தல்களில் தேர்தல் வன்முறைகள் இடம்பெற்ற இடங்கள் கண்டறியப்பட்டு பாதுகாப்பை பலப்படுத்த விசேட வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான இருபதுக்கும் மேற்பட்ட இடங்கள் கண்டறியப்பட்டு அறிக்கை பெறப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வாக்களிப்பு நிலையத்திலும் சட்ட விரோதமான செயற்பாடுகள் இடம்பெற்றால் அந்த வாக்களிப்பு நிலையத்தை இரத்துச் செய்யவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.