;
Athirady Tamil News

இலங்கையின் வருமான நடவடிக்கை: சர்வதேச நாணய நிதியம் விசேட கோரிக்கை

0

அடுத்த ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டம், பொருத்தமான வருமான நடவடிக்கைகள் மற்றும் தொடர்ச்சியான செலவினக் கட்டுப்பாடு ஆகியவற்றை மையப்படுத்த வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3 சதவீதமான நடுத்தர கால முதன்மை இருப்பு இலக்கை அடையவும், இலங்கையின் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் இது தேவையானது என்று சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான திட்டத்தலைவர் பீட்டர் ப்ரூயர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் மோட்டார் வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளின் திட்டமிட்ட தளர்வு 2025 ஆம் ஆண்டில் வருமானத்; திரட்டலை கொண்டு வரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய வரி விலக்கு
புதிய வரி விலக்குகளைத் தவிர்ப்பது, ஊழல் அபாயங்கள் மற்றும் நிதி வருமானக் கசிவுகளைக் குறைப்பது மட்டுமல்லாமல், ஊகிக்கக்கூடிய வெளிப்படையான வரி முறையை உறுதி செய்வது, சாத்தியமான நிதிச் செலவைத் தவிர்க்கவும், எரிசக்தி விலைகளைத் தொடர்ந்து செலவு-மீட்பு நிலைகளில் பராமரிப்பது மிகவும் முக்கியமானது என்று ப்ரூயர் வலியுறுத்தியுள்ளார்.

பணப் பரிமாற்றங்களின் மூலம் ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாப்பது முக்கியமானதாக உள்ளது அத்துடன், கொள்கை சறுக்கல்கள் மீட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கடன் நிலைத்தன்மையை உரிய பாதையில் கொண்டு செல்வதில் ஏற்பட்ட முன்னேற்றத்திற்காக இலங்கை அதிகாரிகளைப் பாராட்டிய அவர், உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பை நிறைவேற்றுவது மற்றும் அதிகாரப்பூர்வ கடன் குழு மற்றும் சீனா எக்ஸிம் வங்கியுடன் ஒப்பந்தங்களை இறுதி செய்வது முக்கிய மைல்கற்களாகும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.