;
Athirady Tamil News

கொக்கு தன் குஞ்சுகளுக்கு உணவளிக்கும் அரிய காட்சி… எவ்வளவு மீன்கள் என்று பாருங்களே!

0

கொக்கொன்று வாய் நிறைய மீன்களை பிடித்து சேமித்து வைத்து தன் குஞ்சுகளுக்கு உணவு வழங்கும் அரிய காட்சியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இவ்வுலகில் அனைத்து உயிர்களுக்கும் பொதுவான ஒரு விடயம் தான் தாய். தாயின் அன்புக்கு நிகரான ஒரு பாசத்தை வேறு யாராலும் கொடுக்கவே முடியாது.

காரணம் எல்லா அன்பிலும் சிறிதேனும் சுயநலம் நிச்சயம் ஒழிந்திருக்கும் ஆனால் ஒரு தாய் தன் குழந்தைக்கு வழங்கும் அன்பில் துளியளவும் சுயநலம் இருப்பதில்லை.

தாயின் அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் அற்றது. தனக்கு உணவு இல்லாவிட்டாலும் தன் குழந்தை சாப்பிட வேண்டும் என்ற மனம் தய்மைக்கு மட்டுமே உரியது.

இதனை பறைசாற்றும் வகையில் கொக்கொன்று மீன்களை பிடித்து சேமித்து வைத்து தன் குஞ்சுகளுக்கு உணவு கொடுக்கும் சுவாரைஸ்யமான காட்சி இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.