வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவிற்கு காரணம் இதுதான்- அருள்வாக்கு கூறிய சாமியார்
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு காரணம் என்ன என்பது குறித்து சாமியார் ஒருவர் அருள்வாக்கு கூறியுள்ளார்.
வயநாட்டு நிலச்சரிவு
கேரளா, வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கற்பனையில் கூட நினைத்து பார்க்கமுடியாத வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 344ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 9328 பேர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
அருள்வாக்கு கூறிய சாமியார்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் தெருவில் உள்ள சிவசக்தி பத்திரகாளியம்மன் கோவில், மலையாளத்து சுடலை மகாராஜா கோவில் ஆடி கொடை விழா நடைபெற்றுவருகிறது.
இதைத்தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சாமியார் அருள்வாக்கு வழங்கினார்.
அப்போது அவர் கூறுகையில், “தர்மம் அழிந்து அநீதி அதிகரித்த காரணத்தினால் தான் வயநாடு நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்கள் நடைபெற்று வருகிறது.
மேலும், அந்த இயற்கை சீற்றங்கள் தமிழகத்தை நோக்கி வருவதாகவும், மக்களின் சுயநலம்தான் இதற்கு காரணம்” என்றார்.