ட்ரம்ப் வெற்றி பெற இந்தியவம்சாவளிப்பெண் உதவுவார்: ஆவிகளுடன் பேசும் பிரித்தானியர் பரபரப்பு தகவல்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என்பதுகுறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார் புதிய நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும், ஆவிகளுடன் பேசும் பிரித்தானியர் ஒருவர்.
ஆவிகளுடன் பேசும் நபர் தெரிவித்துள்ள கருத்து
இந்திய ஆப்பிரிக்க வம்சாவளியினரான கமலா ஹரிஸ் அடுத்து அமெரிக்க ஜனாதிபதியாகக்கூடும் என ஊடகங்கள் கருத்துக்களை தெரிவித்துக்கொண்டிருக்கின்றன.
ஆனால், ஆவிகளுடன் பேசுபவராகிய Craig Hamilton-Parker என்னும் பிரித்தானியர், உலகம் முழுவதும் போர் பதற்றம் நிலவும் நிலையில், ஜோ பைடனுக்கு பதிலாக கமலா ஹரிஸ் போர் தொடர்பில் சில முக்கிய முடிவுகளை எடுக்கவேண்டியிருக்கும்.
ஆனால், அவர் எடுக்கும் முடிவுகள் அவரை பலவீனமானவராக காட்டும். அதைப் பயன்படுத்திக்கொண்டு, ட்ரம்ப் தன்னை வலிமையானவராக முன்னிறுத்தி ஜனாதிபதியாக வாய்ப்புள்ளது என்கிறார் பார்க்கர்.
வெற்றி பெற இந்தியவம்சாவளிப்பெண் உதவுவார்
அத்துடன், இன்னொரு பரபரப்புத் தகவலையும் வெளியிட்டுள்ளார் பார்க்கர். அதாவது, ட்ரம்ப் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற, இந்திய அல்லது ஆப்பிரிக்க வம்சாவளியினரான ஒரு பெண் அவருக்கு உதவுவார் என்று கூறியுள்ளார் அவர்.
முதலில், அந்தப் பெண், வர்ணனையாளரான Candace Owensஆக இருக்கலாம் என்று நான் நினைத்தேன். ஆனால், அது ட்ரம்ப் ஆதரவாளரான J. D. Vanceஇன் மனைவியான உஷாவாக இருக்கும் (Usha Chilukuri Vance) என்று இப்போது தோன்றுகிறது என்று கூறியுள்ளார் பார்க்கர். உஷா, இந்தியப் பெற்றோருக்கு பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.