;
Athirady Tamil News

திருமணம் குறித்து பட்டப்படிப்பை வழங்கும் சீன பல்கலைக்கழகம்..!

0

சீனாவின் சிவில் விவகார பல்கலைக்கழகம் (Civil Affairs University) திருமணத்தை மையமாகக் கொண்ட ஒரு புதிய இளங்கலை பட்டப்படிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.

திருமணங்கள் தொடர்பான தொழில் மற்றும் கலாசாரம் குறித்து இந்த படிப்பில் கற்பிக்கப்படும் என தெரியவந்துள்ளது.

இத்துறையில் வல்லுனர்கள் தயார்படுத்தப்படுவார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமண சேவைகள் மற்றும் மேலாண்மை என்ற பாடத்திட்டம் செப்டம்பரில் தொடங்கும் என இப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

சீனாவில் திருமண விகிதம் குறைந்து வரும் நிலையில் சமூக ஊடக பயனர்களிடமிருந்து சந்தேகம் மற்றும் விமர்சனங்களின் கலவையைத் தூண்டியது.

இது குடும்ப ஆலோசனை, உயர்தர திருமண விழாவை திட்டமிடுதல், உறவுகளை கட்டியெழுப்புதல் போன்றவற்றைக் கற்பிக்கும் படிப்பாகும்.

நாட்டின் 12 மாகாணங்களைச் சேர்ந்த 70 இளங்கலை மாணவர்கள் இந்தப் பாடநெறிக்கு உள்வாங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.