;
Athirady Tamil News

செல்போன் பார்க்க விடவில்லை – குழந்தைகள் தொடர்ந்த வழக்கால் பெற்றோருக்கு ஏற்பட்ட சிக்கல்

0

செல்போன் பார்க்க அனுமதிக்காத பெற்றோர்கள் மீது குழந்தைகள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்போன் பயன்பாடு
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெற்றோர் வரை செல்போன் பயன்பாட்டிற்கு அடிமையாகியுள்ளனர். கேம் விளையாடுவது, வீடியோ பார்ப்பது என பெரும்பாலான நேரங்கள் செல்போனில் மூழ்கியுள்ளனர்.

குழந்தைகளை செல்போன் பழக்கத்தில் இருந்து தடுப்பதே பெற்றோருக்கு வேலையாக உள்ளது. இந்த நிலையில் டிவி, செல்போன் பார்க்க தங்களை அனுமதிக்கவில்லை என பெற்றோர் மீது குழந்தைகள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

கைது
மத்தியப் பிரதேசம் இந்தூரை சேர்ந்த தம்பதிக்கு 21 வயதில் மகளும், 8 வயதில் மகனும் உள்ளனர். கோவிட் லாக்டவுன் காலத்திலிருந்தே இவர்களை செல்போனையும், டிவியையும் பார்க்க பெற்றோர் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், கோபமடைந்த இருவரும் தங்களின் பெற்றோர்களுக்கு எதிராக கடந்த 2021 ம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி சாந்தன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அவர்கள் அளித்த புகாரில், பெற்றோர் தங்களை தொலைக்காட்சி, செல்போன்கள் பார்க்கக் தடை செய்ததாகவும், துன்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இதை தொடர்ந்து விசாரணை நடத்திய காவல்துறையினர், குழந்தைகளின் பெற்றோருக்கு எதிராக இந்திய தண்டனைச்சட்டத்தின் பிரிவுகள் 323, 342, 506 மற்றும் 34 சிறார் நீதிச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பெற்றோர் இருவரையும் கைது செய்துள்ளனர்.

சமீபத்தில் தங்கள் மீது தொடுக்கபட்ட வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி குழந்தைகளின் தந்தை அஜய் சௌஹான் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மனுவையடுத்து, நீதிமன்றம் தற்காலிகமாக இந்த வழக்கை நிறுத்தி வைத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.