;
Athirady Tamil News

வாழைத்தண்டு சூப் குடிப்பதன் ஆரோக்கிய நன்மைகள் இவ்வளவா?

0

மாலை நேரங்களில் வழக்கமாக அனைவரும் காபி, டீ போன்றவற்றை அருந்தும் பழக்கம் கொண்டவர்களாக தான் இருக்கிறோம். இதை தவிர நாம் வீட்டில் வித்தியாசமாக எதாவது செய்து சாப்பிட்டால் சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும் என நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பொருத்தமாக இருக்கும்.

பொதுவாக காய்கறிகள் மிகவும் ஆரோக்கியமானது. இதை பெரும்பாலும் யாரும் விரும்பி சாப்பிடாத சமயத்தில் இதை வைத்து சூப் செய்தால் எல்லோருக்கும் பிடிக்கும்.

அப்படி ஒரு சூப் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். இன்று பார்க்கவிருக்கும் சூப் என்னவென்றால் வாழைத்தண்டு சூப் ஆகும். இது முற்றிலும் ஆரோக்கிய நன்மை நிறைந்த ஒரு உணவாகும்.

தேவையான பொருட்கள்
வாழைத்தண்டு – 1
தக்காளி – 1
சின்ன வெங்காயம் – 6
பெரிய வெங்காயம் – 1
பூண்டு – 10
சீரைகம் – கால் ஸ்பூன்
மிளகு – கால் ஸ்பூன்
இஞ்சி – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – போதுமான அளவு
செய்யும் முறை
முதலில் எடுத்துக்கொண்ட வாழைத்தண்டு தக்காளி வெங்காயம் ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி தனியே தயாலாக எடுத்து வைக்கவும்.

தொடர்ந்து குக்கர் ஒன்றில் சிறிதளவு தண்ணீருடன் வாழைத்தண்டு தக்காளி சின்ன வெங்காயம் பூண்டு சீரகம் மிளகு ஆகியவற்றை சேர்த்து 4 விசில் வரும் வரையில் வேக வைத்து இறக்க வேண்டும்.

பின்னர் இந்த சேர்மத்தை மிக்ஸிய் போட்டு நன்கு விழுது போல அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். இதை தனியே எடுத்து வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடேற்றவும்.

எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம் இஞ்சி சேர்த்து வதக்கவும். இப்படி செய்து இறக்கினால் சுவையான வாழைத்தண்டு சூப் தயார். இந்த சூப் குடிப்பதால் இது உடல் எடையைக் குறைக்கவும், உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் பெரிதும் உதவுகிறது.

மேலும் இது நமது உடம்பில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றவும் துணை புரிகிறது. அத்தோடு வாழைத்தண்டில் கொழுப்பு குறைவாக இருப்பதோடு, எளிதில் செரிமானம் ஆகி விடும் தன்மை கொண்டது. மேலும் சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள் இதனை தொடர்ந்து எடுத்துக் கொண்டால், விரைவில் நலம் பெறுவார்கள்.

வாழைத்தண்டு நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளை குணப்படுத்தும் சக்தியும் கொண்டது. பொதுவாக மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் வாழைத்தண்டு உண்பது நல்லது.

தீக்காயங்கள் நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் போது இந்த வாழைத்தண்டு சுப் நன்மை தரும். பெண்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு வாழைத்தண்டு மூலம் தீர்வு கிடைக்கும். இதனால் இந்த சூப் பெண்கள் சாப்பிடுவது மிகவும் நன்மை தரும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.