;
Athirady Tamil News

உச்சக்கட்ட பதற்றம்..! இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா பாரிய ஏவுகணை தாக்குதல்

0

வடக்கு இஸ்ரேலில் (isral) உள்ள பெய்ட் ஹில்லெல் (Beit Hillel) நகரில் நூற்றுக்கணக்கான ஏவுகணைககள் மூலம் ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதல் சம்பவமானது ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் (22:25 BST சனிக்கிழமை) உள்ளூர் நேரப்படி சுமார் 00:25 மணியளவில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதல் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காட்சிகளில் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஏவுகணைகளை இடைமறிக்கும் காட்சிகளைக் காட்டுகின்றன எனினும், உயிர் சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

புதிய போர் ஆரம்பம்
ஹமாஸ் தலைவர் ஹனியே மற்றும் ஹிஸ்புல்லா இராணுவ தளபதி ஃபுவாட் ஷுகர் (Fuad Shukr) ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட பின்னர் முதன்முறையாக ஹிஸ்புல்லா (Hezbollah) தலைவர் ஹசன் நஸ்ரல்லா (Hassan Nasrallah) இஸ்ரேலுக்கு எதிரான தனது எதிர்ப்பு குரலை வெளிப்படுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து லெபனான் (Lebanon), யேமன் (Yemen) மற்றும் ஜோர்தான் (Jordan) உட்பட, மத்திய கிழக்கு முழுவதும் இஸ்ரேல் மீது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

எனவே, ஷுகரைக் கொன்றதன் மூலம் ஒரு புதிய போர் ஆரம்பமாகியுள்ளது என ஹசன் கூறியமை சர்வதேசத்தை அச்சநிலைக்கு தள்ளியுள்ளது.

இஸ்ரேலின் கடுமையான பதிலடி
மத்திய கிழக்கில் ஈரான் (iran) ஆதரவுக் குழுக்களில் ஒன்றான லெபனானை தளமாகக் கொண்ட ஹிஸ்புல்லாவின் தாக்குதலானது, இஸ்ரேலின் கடுமையான பதிலடியை தூண்டக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்த தாக்குதல் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் “நிலைமை எப்போது வேண்டுமானாலும் மேலும் மோசமடைய கூடும்” என்பது தற்போதைய நிலைமை சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், உலகின் பல நாடுகளும் லெபனானில் உள்ள தமது நாட்டவர்களை உடனடியாக வெளியேறுமாறும் மற்றவர்கள் அங்கு பயணிக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.