கப்பல்கள் மீதான தாக்குதலை மீண்டும் ஆரம்பித்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
அரபிக்கடலின் ஏடன் வளைகுடாவில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று(04) மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
லைபிரியா நாட்டிற்கு சொந்தமான இக்கப்பல் ஏடன் வளைகுடா வழியாக டிஜிபோதி நாட்டிற்கு சென்றுகொண்டிருந்தது. அந்த கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஏவுகணை தாக்குதல்
ஏமன் நாட்டின் ஏடன் துறைமுகத்தில் இருந்து 125 நாட்டிகல் மைல் தொலைவில் சென்றுகொண்டிருந்த கப்பலை குறிவைத்து இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உரிமை கோரிய கிளர்ச்சியாளர்கள்
ஹவுதி இராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சாரி ஞாயிற்றுக்கிழமை ஒரு தொலைக்காட்சி அறிக்கையில் MV Groton என்ற கப்பல் பாலிஸ்டிக் ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக தெரிவித்தார்.
அமெரிக்க கடற்படையால் மேற்பார்வையிடப்படும் பன்னாட்டுக் கூட்டணியான கூட்டு கடல்சார் தகவல் மையம் (ஜேஎம்ஐசி), கப்பலில் இருந்த அனைத்துக் குழு உறுப்பினர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும், “கப்பல் அருகிலுள்ள துறைமுகத்திற்குத் திருப்பிவிடப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.”