;
Athirady Tamil News

அமெரிக்காவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் : காரணம் தெரியுமா..!

0

அமெரிக்காவில்(americca) பறப்பில் ஈடுபட்டிருந்த விமானம் ஒன்றில் பயணித்த பெண்ணின் தலையில் அதிகளவில் பேன்கள் இருந்ததால் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து நியுயோர்க் நோக்கி சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று, திடீரென பீனிக்ஸ் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

வைரலாகும் காணொளி
இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ஈதன் ஜுடல்சன் என்ற நபர் டிக்டொக் செயலியில் வெளியிட்ட காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

அந்த காணொளியில், சம்பவம் நடந்தபோது அவரும் அந்த விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்ததாகவும், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது குறித்த முழுமையான விவரத்தை விமான நிறுவனம் வெளியிடவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் அந்த காணொளியில், “விமானத்தில் பயங்கரமான நிகழ்வு எதுவும் நடக்கவில்லை. யாரும் மயக்கமடையவில்லை, யாரும் பதற்றமடையவில்லை. ஆனால் விமானம் தரையிறங்கியபோது ஒரு பெண் விமானத்தின் முன்பகுதியை நோக்கி வேகமாக ஓடினார். இது குறித்து எனது சக பயணிகளிடம் நான் விசாரித்தபோது, விமானத்தில் இருந்த ஒரு பெண்ணின் தலையில் பேன்கள் இருப்பதாக கூறி 2 பெண்கள் கூச்சலிட்டதாக தெரிவித்தனர்.

அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
இது குறித்து விமான ஊழியர்களிடமும் அந்த பெண்கள் முறையிட்டுள்ளனர். இதன் காரணமாகவே விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அதே சமயம் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம், அடுத்த 12 மணி நேரத்தில் மீண்டும் இயக்கப்பட்டதாகவும், பயணிகள் அனைவருக்கும் மீண்டும் அதே இருக்கைகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள ஜுடல்சன், பேன்கள் குறித்து குற்றச்சாட்டு கூறிய 2 பெண்கள் அதே இருக்கை வேண்டாம் என்று வாக்குவாதம் செய்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.