வேலையை இழந்த இரண்டே நாட்களில் ஜாக்பாட்: பெண்ணுக்கு ரூ. 9 கோடி லொட்டரி
அமெரிக்காவில் பெண் ஒருவருக்கு வேலை இழந்த இரண்டே நாட்களில் லொட்டரியில் சுமார் ரூ. 9 கோடி பரிசு விழுந்துள்ளது.
ஐடி துறை உட்பட அனைத்து தனியார் நிறுவனங்களிலும் பணியாளர்கள் ஆட்குறைப்பு செயல்முறைகள் சமீபகாலமாக அதிகமாக உள்ளது.
ஜூம் கால், இமெயில், வாட்ஸ்அப் மெசேஜ் மூலம் பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவங்கள் பல நடந்துள்ளது.
அவ்வாறு வேலையிழந்த பெண் ஒருவர், சில நாட்களுக்கு முன், தன் வீட்டிற்கு மளிகைப் பொருட்கள் வாங்கும் போது, லொட்டரி சீட்டு ஒன்றை வாங்கி இருந்தாள்.
வேலை இழந்த வேதனையில் இருந்த அவருக்கு, அடுத்த இரண்டு நாட்களில் இந்த லொட்டரியில் 3,00,000 டொலர் ஜாக்போட் அடித்தது. இது இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.9 கோடி ஆகும்.
இச்சம்பவம் அமெரிக்காவின் சவுத் கரோலினாவில் நடந்துள்ளது.
அவர் வேலை இழப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஷாப்பிங் சென்றபொது, 10 டொலர் கொடுத்து Gold Rush scratch-off லொட்டரி சீட்டை வாங்கியுள்ளார்.
எப்போதாவது லொட்டரி சீட்டு வாங்கும் இவர், இந்த முறையும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாங்கியுள்ளார்.
அதேநேரம், அவருக்கு பேரதிர்ச்சியாக வேலையும் பறிபோனது. நமக்கு அதிர்ஷ்டமும் இல்லை, நேரமும் சரியில்லை என வேதனையடைந்துள்ளார்.
வேலையை இழந்து அடுத்து என்ன நடக்குமோ என்ற கவலையில் இருந்த நிலையில், இரண்டு நாட்களில் வாங்கிய லொட்டரி பரிசு அறிவிக்கப்பட்டது. அதை கீறினால் 2.5 கோடி ரூபாய் பரிசு விழுந்தது.
இந்தப் பணத்தில் சொந்த வீடு வாங்க திட்டமிட்டுள்ள அப்பெண், வேலையை இழந்துவிட்டதால், சொந்தமாக சிறு தொழில் தொடங்கவும் முடிவெடுத்துள்ளார்.