;
Athirady Tamil News

5000 கிமீ தொலைவில் இருந்து ரோபோ மூலம் நுரையீரல் கட்டியை அகற்றிய வைத்தியர்

0

5000 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து நோயாளிக்கு நுரையீரல் கட்டி அகற்றும் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.

சுமார் ஒரு மணி நேரம் இந்த ஆபரேஷன் நடந்தது. ஜூலை 13-ஆம் திகதி இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 5G அறுவை சிகிச்சை ரோபோவைப் பயன்படுத்தி ஒரு ரிமோட் ஆபரேஷன் செய்து நுரையீரல் கட்டியை அவர் அகற்றினார்.

டெலிமெடிசின் (Telemedicine) மற்றும் ரோபோடிக் (Robotic) அறுவை சிகிச்சையில் இது ஒரு முக்கிய படியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Shanghai Chest Hospital-ன் புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணரான Dr Luo Qingquan, தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது அலுவலகத்தில் இருந்து ரோபோடிக் அறுவை சிகிச்சை முறை மூலம் அறுவை சிகிச்சை செய்தார்.

ரோபோ அறுவை சிகிச்சையை நடத்துவதோடு, ரோபோ தொழில்நுட்பத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியிலும் மருத்துவமனை ஈடுபட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.