திருவிழாவின் போது இடிந்து விழுந்த கோவில் சுவர் – பரிதாபமாக உயிரிழந்த 9 குழந்தைகள்
கோவில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவில் சுவர்
மத்திய பிரதேச மாநில சாகர் மாவட்டம் சாஹ்பூரில் 50 ஆண்டுகள் பழமையான ஹர்தவுல் பாபா கோயில் உள்ளது. இங்கு கோயில் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்துள்ளனர்.
அப்போது திடீரென கோயில் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. கோவில் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கிய பலர் அலறி துடித்தனர். இந்த இடிபாடுகளில் சிக்கி 9 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இறந்த குழந்தைகள்
அனைவரும் 10-15 வயது உடையவர்கள் ஆகும். காரணம் தகவலறிந்ததும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தற்போது இடிபாடுகள் அகற்றப்பட்டுள்ளன. 50 ஆண்டுகள் பழமையான சுவர் என்பதால் கனமழை பெய்ததில் இடிந்து விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்துக்கு மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் இரங்கல் தெரிவித்துள்ள்ளார். மேலும், உயிரிழந்த 9 குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ 4 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மத்திய பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.
आज सागर जिले के शाहपुर में हुई अतिवृष्टि के कारण जर्जर मकान की दीवार गिरने से 9 मासूम बच्चों के काल कवलित होने की खबर सुनकर मन व्यथित है। घायल बच्चों के उचित इलाज के लिए जिला प्रशासन को निर्देशित किया है।
भगवान से करबद्ध प्रार्थना है कि दिवंगत बच्चों की आत्मा को शांति प्रदान…
— Dr Mohan Yadav (@DrMohanYadav51) August 4, 2024
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் பாழடைந்த சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் பலியான நிலையில் தற்போது 9 குழந்தைகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.