;
Athirady Tamil News

40 கோடி மதிக்கத்தக்க ஆபத்தான பொருளுடன் சிக்கிய செல்வத்தின் கைப்பிள்ளை!!

0

மன்னாரின் பிரபல மணல் மாபியா போதை வஸ்து கடத்தியதாக அதிரடி கைது செய்யப்பட்டுள்ள ரேஜன் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது பிணையை நிராகரித்து சிறையில் அடைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மோசடி பேர்வழி ரேஜன் கைது செய்யப்பட்டதில் இருந்து தூக்கத்தை இழந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வன்னி பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருடன் தனக்கு தெரிந்த மொழியில் கதைத்தும் எதுவும் சாத்தியப்படவில்லை என கூறப்படுகிறது.

மோசடி பேர்வழி ரேஜன் 40 கோடி மதிக்கத்தக்க உயர் ரகமான போதைப்பொருளை கொழும்புக்கு கொண்டு செல்லும் வழியில் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இலங்கையில் போதைவஸ்துக்கு எதிரான சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளதால் பிணை சாத்தியமில்லை என போலீசார் கூறியதை அடுத்து செல்வம் அடைக்கலநாதன் எம்.பியின் உதவியாளர் குருசுவாமி சுரேந்திரன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருடன் கதைத்துள்ளதாகவும் நீதிமன்ற விவகாரங்களில் தாம் தலையிட முடியாது என கூறியதாக செல்வத்தின் நெருங்கிய ஊடகவியலாளர் யாழ்ப்பாண புலனாய்வுக்கு உறுதிப்படுத்தினார்.

இறுதியாக ஜனாதிபதி தேர்தல் காலம் மோசடி பேர்வழி ரேஜனை விடுதலை செய்தால் ரணிலுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க தயார் என செல்வம் அடைக்கலநாதன் முடிவு செய்துள்ளதாக கூறும் ஊடகவியலாளர், கொழும்பில் குறித்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதியை சந்திப்பதற்கு முடிவு செய்துள்ளதாக மேலும் குறித்த ஊடகவியலாளர் யாழ்ப்பாண புலனாய்வுக்கு எழுத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதே வேளை பிரபல சட்டத்தரணிகள் இடத்திலும் கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.