பங்களாதேஷில் இடைக்கால அரசாங்கம் : இராணுவ தளபதி அதிரடி அறிவிப்பு
பங்களாதேஷில் இடைக்கால அரசாங்கமொன்று ஏற்படுத்தப்படும் என அந்த நாட்டின் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று (05) ஷேக் ஹசீனா (Sheikh Hasina) பதவி விலகி விட்டு நாட்டிலிருந்து தப்பியோடிய பின்னர் நாட்டு மக்களிற்கு உரையாற்றியுள்ள இராணுவதளபதி வகெர் உஸ் ஜமான் (Waker-Uz-Zaman) இடைக்கால அரசாங்கம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியை சந்தித்தல்
இதேவேளை ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன் சுப்புவை (Mohammed Shahabuddin) சந்திக்கப்போவதாகவும் இன்றைய நாளிற்குள் தீர்வு ஒன்று சாத்தியப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே நான் எதிர்க் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளேன் என தெரிவித்துள்ள அவர் பங்களாதேஷ் மக்களிற்கு நீதி கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.