;
Athirady Tamil News

பிரித்தானியாவுக்குச் செல்லவேண்டாம்… பயண எச்சரிக்கை விடுத்துள்ள நாடுகள்

0

பிரித்தானியாவுக்குச் செல்லவேண்டாம் என்று சில நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பிரித்தானியாவிலிருக்கும் தங்கள் நாட்டவர்களை உடனடியாக வெளியேறுமாறு சில நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.

பயண எச்சரிக்கை விடுத்துள்ள நாடுகள்
பிரித்தானியாவின் பல பகுதிகளில் வன்முறை வெடித்ததைக் குறித்த செய்திகள் வெளியாகிவருவதைத் தொடர்ந்து, பிரித்தானியாவுக்குச் செல்லவேண்டாம் என சில நாடுகள் தங்கள் குடிமக்களை எச்சரித்துள்ளன.

பிரித்தானியாவுக்குப் பயணிப்பதற்கு எதிராக பயண எச்சரிக்கை விடுத்துள்ள முதல் நாடு மலேசியா. லண்டனிலிருக்கும் உயர் ஸ்தானிகர் மூலம், மலேசிய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், பிரித்தானியாவுக்குச் செல்லும் மற்றும் பிரித்தானியாவிலிருக்கும் மலேசிய நாட்டவர்கள், போராட்டங்கள் நடக்கும் இடங்களிலிருந்து விலகியிருக்குமாறும், கவனமாக இருக்குமாறும், உள்ளூர் அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி நடந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயண எச்சரிக்கை விடுத்துள்ள மற்ற நாடுகள் கனடாவும், அவுஸ்திரேலியாவும்.

சுவிட்சர்லாந்து பயண எச்சரிக்கை விடுக்காமல், தங்கள் குடிமக்கள் போராட்டங்கள் நடைபெறும் இடத்துக்குச் செல்லவேண்டாம் என்றும் வன்முறை வெடிக்கக்கூடும் என்றும், போக்குவரத்துக்கு இடையூறும் தாமதமும் ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.