;
Athirady Tamil News

வாட்டியெடுத்த வெப்ப அலை… அறுவடையில் உக்ரைனுக்கு பலத்த அடி

0

ஜூலை மாதம் வாட்டியெடுத்த வெப்ப அலை காரணமாக சோள அறுவடையில் சுமார் 6 மில்லியன் மெட்ரிக் டன்கள் குறையலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரேனிய விவசாய கவுன்சில்
உக்ரைன் வேளாண் அமைப்பு ஒன்று குறித்த தகவலை வார இறுதியில் வெளியிட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக பல பகுதிகளில் சோள விளைச்சல் சுமார் 30 சதவீதம் குறையக்கூடும் என நாட்டின் முக்கிய விவசாய உற்பத்தியாளர்கள் குழு, உக்ரேனிய விவசாய கவுன்சிலின் தலைவர்களில் ஒருவர் Denys Marchuk தெரிவித்துள்ளார்.

2023ல் சோள விளைச்சல் 29.6 டன்கள் என இருந்த நிலையில் தற்போது 23.4 டன்கள் என இருக்கும் என்றும் உக்ரேனிய விவசாய கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதனிடையே, உக்ரைனில் இருந்து தானிய ஏற்றுமதி அதிகரித்துள்ளதாகவே கூறப்படுகிறது. 2023 ஜூலை மாதம் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா வெளியேறியதன் பின்னர் தானிய ஏற்றுமதியின் மொத்த அளவு செப்டம்பர் 2023ல் 2 மில்லியன் டன்னிலிருந்து டிசம்பரில் 5.2 மில்லியன் டன்னாக உயர்ந்தது.

அறுவடையின் பெரும்பகுதி
ஆனால் உக்ரைனின் கருங்கடல் துறைமுகங்கள் மற்றும் டான்யூப் நதியில் தானிய உள்கட்டமைப்பு மீது ரஷ்யா குண்டுவீசித் தாக்கியது. 2023 மற்றும் 2024 சீசனில் சோளம் ஏற்றுமதியானது 8 சதவிகிதம் அதிகரித்து 29.2 மில்லியன் டன் எனவும்,

கோதுமை ஏற்றுமதி 3 சதவிகிதம் அதிகரித்து 3.3 மில்லியன் டன் எனவும் கம்பு ஏற்றுமதி கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகரித்து 170,000 டன் எனவும் பதிவாகியுள்ளது.

2023 டிசம்பர் மாத ஏற்றுமதியை ஒப்பிடுகையில், அனைத்து தானியங்களுக்கும் சராசரியாக மாதாந்திர ஏற்றுமதி சுமார் 4 மில்லியன் டன்கள் என பதிவானால் அவர்கள் அறுவடையின் பெரும்பகுதியை ஏற்றுமதி செய்வார்கள் என்றே நம்பப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.