;
Athirady Tamil News

ஒலிம்பிக் 2024: சுவிஸ் வீரர் ஒருவருக்கும் உடல்நல பாதிப்பு: பாரீஸ் நதி நீர் தான் காரணமா?

0

ஒலிம்பிக் ட்ரையத்லான் போட்டிகளில் பங்கேற்ற சுவிஸ் வீரர் ஒருவருக்கும் உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கும் நீச்சல் போட்டிகள் நடக்கும் நதியின் நீர்தான் காரணமா என கேள்வி எழுந்துள்ளது.

சுவிஸ் வீரர் ஒருவருக்கும் உடல்நல பாதிப்பு

பாரீஸில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில், ட்ரையத்லான் போட்டிகாக Seine நதியில் நீந்தினார் சுவிஸ் தடகள வீரரான Adrien Briffod.

தற்போது, அவருக்கு வயிற்று உபாதை ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் போட்டியை முடிக்கமுடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், அவரது பிரச்சினைக்கு Seine நதி நீர்தான் காரணமாக என கேள்வி எழுந்துள்ளது.

ஆனால், அவரது வயிற்று உபாதைக்கு Seine நதி நீர்தான் காரணம் என்பதை உறுதியாகக் கூறமுடியாது என சுவிஸ் ஒலிம்பிக் அணி தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பெல்ஜியம் நாட்டு வீராங்கனையான Claire Michel, நதியில் நீந்தியதால் ஈ.கோலை கிருமித் தொற்றுக்கு ஆளாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.