15 வயது சிறுவனுக்கு சிறைத்தண்டனை விதிக்க முடிவு செய்துள்ள ஜேர்மன் நீதிமன்றம்
ஜேர்மனியில் 15 வயது சிறுவன் ஒருவனுக்கு சிறைத்தண்டனை விதிக்க நீதிமன்றம் ஒன்று முடிவு செய்துள்ளது.
சக மாணவனை கொன்ற சிறுவன்
கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம், ஜேர்மனியின் பவேரியா மாகாணத்திலுள்ள பள்ளி ஒன்றில் பயின்றுவந்த 15 வயது சிறுவன் ஒருவன், தன் சக மாணவனான இத்தாலி நாட்டைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவனை துப்பாக்கியால் சுட்டதில் அந்தச் சிறுவன் உயிரிழந்தான்.
சுட்ட சிறுவனுக்கு 15 வயது என்பதால், இந்த வழக்கு மூடப்பட்ட அறைகளுக்குள் நடந்துவந்தது.
இந்நிலையில், அவன் தான் திட்டமிட்டு தன் சக மாணவனைக் கொல்லவில்லை என்று கூறியதுடன், அவனுடைய குடும்பத்தினரிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டான் குற்றம் சாட்டப்பட்டுள்ள சிறுவன்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள சிறுவன் தரப்பு சட்டத்தரணிகள் அவன் திட்டமிட்டு கொலை செய்யவில்லை என்றும், அரசு தரப்பு சட்டத்தரணிகள் அவன் திட்டமிட்டே கொலை செய்தான் என்றும் வாதிட்டார்கள்.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட Würzburg நகர நீதிமன்ற நீதிபதி, அந்தச் சிறுவனுக்கு எட்டரையாண்டுகள் சிறைத்தண்டனை அளித்து தீர்ப்பளித்தார். அவன் சிறார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.