மீட்பு பணிக்கு நானும் வருகிறேன்.., ராணுவத்திற்கு கடிதம் எழுதிய 3-ம் வகுப்பு மாணவன்
வயநாடு நிலச்சரிவு மீட்பு பணியில் நானும் ராணுவத்துடன் இணைந்து செயல்பட ஆர்வமாக இருக்கிறேன் வேண்டும் 3-ம் வகுப்பு மாணவன் கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவில் 360-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்னிக்கை 500யை தாண்ட கூடும் என்று கேரள வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இந்த நிலச்சரிவு மீட்பு பணியில் ராணுவத்தினர் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவன் கடிதம்
இந்நிலையில், மீட்பு பணியில் நானும் ராணுவத்துடன் இணைந்து செயல்பட ஆர்வமாக இருக்கிறேன் வேண்டும் 3-ம் வகுப்பு மாணவன் ரயான் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், “நிலச்சரிவில் ராணுவத்தினர் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். பெய்லி பாலம் அமைத்து மீட்பு பணியில் இறங்கி உள்ளார்கள்.
அவர்கள் உணவுக்காக பிஸ்கட் சாப்பிடுவதை வீடியோவில் பார்த்தேன். சவாலான பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய ராணுவத்திற்கு மகிழ்ச்சியுடன் சல்யூட் அடித்துக் கொள்வதோடு, நானும் ராணுவத்தில் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட ஆர்வமாக உள்ளேன்” என்று எழுதியிருந்தார்.
மாணவனின் கடிதத்திற்கு இந்திய ராணுவம் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பதில் அளித்துள்ளது. அதில், “சிறுவன் ரயானின் இதயப்பூர்வமான வார்த்தைகள் எங்களை ஆழமாக தொட்டன.
இக்கட்ட நேரத்தில் கலங்கரை விளக்கமாக இருக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு உள்ளோம். உங்களின் கடிதம் எங்களின் பணியை உறுதிப்படுத்தியுள்ளது.
உங்களை போன்ற ஜாம்பவான்கள் ராணுவத்தில் இணைவது பெருமையே. நீங்கள் ராணுவ சீருடை அணிந்து எங்களின் பக்கத்தில் நிற்கும் நாளை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நாம் அனைவரும் ஒன்றுபட்டு தேசத்திற்காக செயல்படுவோம்” என்று கூறியுள்ளனர்.