குரங்கு மானுக்கு செய்யும் உதவியால் நெகிழ்ந்து போன இணையவாசிகள்: வைரலாகும் வீடியோ
மான்கள் சாப்பிடுவதற்கு மரத்தின் கிளைகளை கீழே இறக்கி உதவி செய்யும் குரங்கின் வீடியோ வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ
விலங்குகள் பொதுவாக மனிதர்களை விட புத்திகூர்மை உடையவை என கூறினால் அது மிகையாகாது. இந்த காலத்தில் ஒவ்வொரு மனிதனுமே தனக்குள் மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொள்கின்றான்.
ஆனால் மிருகங்கள் முழு ஆதரவுடனும் நன்றியுடனும் நடந்து கொள்கின்றன. சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடும் ஒவ்வொரு வீடியோக்களும் ஒவ்வொரு விதமாக நம் மனதை கவரும்.
அப்படி கவரும் போது எதில் நாம் அதிகமாக மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பது முக்கியம். சில நேரம் விலங்குகள் மனிதர்களைப் போல நடந்துகொள்ள முயற்சி செய்கின்றன. அப்போது எல்லாம், மனிதர்கள் அந்த விலங்குகளைப் பார்த்து ஆச்சரியப்படுகின்றனர்.
அப்படி ஒரு ஆச்சரியப்படும் வீடியோ தான் இது. அந்த வீடியோவில் மான்கள் உணவு தேடிச் சென்று கொண்டிருக்கின்றன.
அருகில் இருக்கும் பசுமையான மர்க்கிளைகள் எல்லாமே உயரத்தில் இருக்கின்றன. அதனால், மான்கள் மேய்வதற்கு இலைகள் இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றன.
அந்த நேரம் பார்த்து அந்த மான்களின் நண்பனான ஒரு குரங்கு, ஒரு மரத்தின் சிறு கிளையைத் தாழ்த்தி, மான்கள் மரத்தின் தழையை சாப்பிட உதவுகின்றன. மான்களும் குரங்கின் உதவியுடன் மரக்கிளையில் உள்ள தழை சாப்பிடுகின்றன.
இந்த வீடியோவை பார்க்கும் போது ஒரு வித மகிழ்ச்சி உண்டாகும். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Friendship is a beautiful journey. pic.twitter.com/FNP6o36D2Y
— Susanta Nanda (@susantananda3) August 4, 2024