யாழ் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா
யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது
இந்திய கலாசார வாரத்தையொட்டி இந்திய துணை தூதர் ஸ்ரீமான் சாய்முரளி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாவலர் 200 என்ற இந்திய இலங்கை அறிஞர்கள் எழுதிய கட்டுரைகளில் தொகுப்பு நூலும் பேராசிரியர் சி.சிவலிங்கராஜா எழுதி கவிஞர் சோ பத்மநாதனால் மொழிபெயர்க்கப்பட்ட யாழ்ப்பாண கல்வி வளர்ச்சியில் இந்திய ஆசிரியர்களின் பங்களிப்பு என்ற நூலின் ஆங்கில பதிப்பும் வெளியிட்டு வைக்கப்பட்டன
நாவலர் 200 நூலின் முதற்பிரதியை செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன், இந்திய ஆசிரியர்களின் பங்களிப்பு நூலின் முதற்பிரதியை வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானமும் பெற்றுக் கொண்டனர்
தொடர்ந்து இந்திய கலைக் கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.