அரிசிமா கோலதில் பசியாறும் நூற்றுக்கணக்கான சிட்டுக்குருவிகள்… வைரல் காட்சி!
அரிசிமா கோலதின் மூலம் நூற்றுக்கணக்கான சிட்டுக்குருவிகள் பசியாறும் நெகிழ்ச்சியான காட்சி அடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
காலையில் எழுந்ததும் வாசலில் மாட்டு சாணம் தெளித்து அரிசி மாவில் கோலம் போடும் ஒரு உன்னதமான பழக்கத்தை இந்துக்கள் தொன்று தொட்டு பின்பற்றி வருகின்றனர்.
அதன் மூலம் வீட்டுக்குள் கிருமிகள் தொற்று ஏற்படுவதை தவிர்ப்பதுடன் ஏனைய உயிர்களுக்கும் உணவு கொடுத்த புண்ணியம் கிடைக்கும்.
தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்று சொல்வார்கள். இதனை மனிதர்களுக்கு தான் வழங்க வேண்டும் என்று இல்லை. பசியோடு இருக்கும் எந்த உயிர்களுக்கும் உணவு கொடுப்பதை விட உயரிய செயல் எதுவும் இருக்க முடியாது.
இதற்கு எடுத்துக்காட்டாக வாசலில் போடப்பட்ட அரிசிமா கோலதின் மூலம் நூற்றுக்கணக்கான சிட்டுக்குருவிகள் பசியாறும் ஒரு கழிப்பூட்டும் காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.