;
Athirady Tamil News

60 வயது நபரை துணை ஜனாதிபதி வேட்பாளர்! அறிவித்த கமலா ஹாரிஸ்

0

கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் துணை வேட்பாளராக டிம் வால்ஸை அறிவித்துள்ளார்.

அரசியல் சூழல்
அமெரிக்காவில் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் சூழல் பரபரப்பாக உள்ளது.

ஜோ பைடனுக்கு பதிலாக ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அந்த கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்தது.

துணை ஜனாதிபதி வேட்பாளர்
இந்த நிலையில் Minnesota ஆளுநர் டிம் வால்ஸை (Tim Walz) துணை ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளார்.

60 வயதாகும் வால்ஸ் தலைமையின் கீழ், Minnesota பல தாராளமயக் கொள்கைகளை செயல்படுத்துவதைக் கண்டுள்ளது.

அவரது முற்போக்கான அணுகுமுறை Senator Bernie Sanders உட்பட பல்வேறு குழுக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.