;
Athirady Tamil News

6000 சிறப்பு பொலிஸார், 500 சிறைச்சாலைகள்: கலவரங்களைக் கட்டுப்படுத்த பிரித்தானிய அரசு அதிரடி

0

பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள கலவரங்களைக் கட்டுப்படுத்த 6000 சிறப்பு பொலிஸாரை தயார் நிலையில் அரசு களமிறக்கியுள்ளது.

கலவரக்காரர்கள் கைது
பிரித்தானியாவின் Southport பகுதியில் நடந்த கொடூர சம்பவத்தில் 3 குழந்தைகள் கொல்லப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் கலவரம் வெடித்துள்ளது.

திங்கட்கிழமை தெற்கு இங்கிலாந்தில் உள்ள பிளைமவுத்தில் கலவரக்காரர்கள் செங்கற்கள் மற்றும் பட்டாசுகளை தூக்கி எறிந்து தாக்கியதில் பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர், அத்துடன் இதில் ஈடுபட்ட 6 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

மேலும் வடக்கு அயர்லாந்தின் பெல்ஃபாஸ்டில் நடந்த கலவரத்தில் 30 வயது மதிக்கத்தக்க நபர் படுகாயமடைந்த தோடு, வெளிநாட்டவர் ஒருவரின் கடைக்கு கலவரக்காரர்கள் தீ வைக்க முயன்றனர்.

அப்போது இதனை தடுக்க முயன்ற அதிகாரி ஒருவரும் தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை இனவெறி தூண்டுதலால் ஏற்பட்ட வெறுப்பு தாக்குதலாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

6000 சிறப்பு பொலிஸார்
பிரித்தானிய நகரங்களில் மேலும் ஒரு இரவு கலவரங்களுக்கு மத்தியில் கடந்த நிலையில், தீவிர வலதுசாரிகளின் கலவரங்களைக் கட்டுப்படுத்த 6000 சிறப்பு பொலிஸார் படையை தயார் நிலையில் அரசு வைத்துள்ளது.

அத்துடன் கலவரக்காரர்களை அடைப்பதற்காக 500 சிறைச்சாலை இருப்பிடங்களை கூடுதலாக விடுவித்து இருப்பதாக பிரித்தானிய நீதி அமைச்சர் Heidi Alexander பிபிசி ரேடியோவில் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.