ஜனாதிபதி தேர்தல் வெற்றி யாருக்கு..! வெளியான கருத்துக்கணிப்பு
IHP என்பது இலங்கையின் கொழும்பில் அமைந்துள்ள ஒரு சுயாதீனமான, பாரபட்சமற்ற ஆராய்ச்சி மையமாகும்.
குறித்த ஆராய்ச்சி மையத்தின் ஜூன் 2024 இன் தரவுகளுக்கமைய வருகின்ற செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் குறித்து எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் ஐக்கிய மக்கள் சக்தி (எஸ். ஜே. பி) கட்சியைச் சேர்ந்த சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2019 நடைபெற்ற கருத்துக்கணிப்பு
கருத்துக்கணிப்பின் படி, சஜித் பிரேமதாச – 43% உம், அனுர குமார திஸாநாயகவிற்கு – 30% உம் , ஜனாதிபதி ராணில் விக்ரமசிங்க – 20% உம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கருத்து கணிப்பானது இலங்கையில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்டோரிடம் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
இதுபோல 2019 நடைபெற்ற கருத்துக்கணிப்பில் இலங்கை பொதுஜன பெரமுனாவை (எஸ். எல். பி. பி) பிரதிநிதித்துவப்படுத்தும் கோட்டாபய ராஜபக்சே, குறிப்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளராக இருந்த பின்னணி மற்றும் ராஜபக்சே குடும்பத்துடனான தொடர்பு காரணமாக குறிப்பிடத்தக்க ஆதரவைக் கொண்ட ஒரு முக்கிய நபராக இருந்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி (எஸ். ஜே. பி) கட்சியைச் சேர்ந்த சஜித் பிரேமதாச, பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நலன் போன்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்திய ஒரு வலுவான போட்டியாளராக இருந்தார்.
எனவே தேர்தலுக்கு முந்தைய மாதங்களில் கருத்துக்கணிப்பு தரவுகள் பொதுவாக ராஜபக்ச பிரேமதாசாவை விட சற்று முன்னிலையில் இருப்பதைக் காட்டியது.
வரவிருக்கும் வாரங்களில் அதன் கருத்துகணிப்பை மேலும் விரிப்படுத்த இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பிரச்சார முன்னேற்றங்கள் மற்றும் வாக்காளர் உணர்வுகளின் அடிப்படையில் இந்த கருத்து கணிப்புகள் மாற்றம் அடையக்கூடும், எனவே 2024 ஜனாதிபதி தேர்தல் உண்மையான வெற்றியாளர் யார் என்பது மக்களின் கைகளிலே உள்ளமை குறிப்பிடத்தக்கது.