மொட்டு தனிவழியில் சென்றாலும் ரணிலுக்கே பெரு வெற்றி ; அம்மா சொன்னதால் போட்டியிலிருந்து விலகிய நாமல்
கடைசி நிமிடம் வரை தம்மிக்க மொட்டு ஜனாதிபதி வேட்பாளராக வருவதாக இருந்தது கடைசியில் தம்மிக்க, தன்னுடைய அம்மா சொன்னதால் ஜனாதிபதி போட்டியிலிருந்து விலக்கிக் கொண்டார் என தெரிவித்து ஒதுங்கியுள்ளதாக ஜீவன் பிரசாத் அவரது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அதற்கான காரணம் மொட்டு கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் ரணிலோடு இணைந்திருக்கும் போது, தன்னால் வெற்றி பெற முடியாது என அவர் கணித்திருக்கலாம்.
அல்லது ரணிலோடு மறைமுக உடன்பாடு ஒன்றை வைத்துக்கொண்டு மஹிந்த தரப்பை கடைசி நிமிடத்தில் வீழ்த்தி இருக்கலாம். ரணில் , ஜனாதிபதி வேட்பாளரானால் தான் போட்டியிடப் போவதில்லை என முன்னர் தொடர்ந்து சொல்லி வந்தார்.
எது எப்படியோ தமிக்க முன்வராமல் போனதால் மொட்டுக்காக ஒருவரை நியமிக்க வேண்டிய நிலைக்கு நாமல் மற்றும் பஸில் தள்ளப்பட்டு விட்டனர். தம்மிக்கவிடம் பணம் இருப்பதால் , அவரை வைத்து தங்கள் பலத்தை உரசிப் பார்க்க நாமல் மற்றும் பஸில் நினைத்திருக்கலாம்.
தம்மிக்க விலகிக் கொண்ட நிலையில் , பலரை தேடியும் , எவரும் முன்வராத நிலையில் , இப்போது இருக்கும் ஒரே வழி நாமலை போட்டியிட வைப்பது தான். நாமலுக்கு வாக்குகள் விழாது. அது ரணிலையும் பாதிக்காது.
மகிந்த மேல் உள்ள ஈர்ப்பு , நாமலிடம் இல்லை. தம்மிக்க வந்திருந்தால் இதைவிட பெரியதொரு வீழ்ச்சி ரணிலுக்கு ஏற்பட்டிருக்கும் காரணம் அவரது DP education மூலம் ஏகப்பட்ட குழந்தைகள் பயனடைந்து இருக்கிறார்கள்.
அவர்களது பெற்றோரது வாக்குகள் கொஞ்சமாவது தம்மிக்கவுக்கு கிடைத்திருக்கும். ரணில் வேட்பாளராக வர மாட்டார் என தம்மிக்கவும் நினைத்தே , நாடு முழுவதும் பணத்தை இறைத்து சான்றிதழ் வழங்கும் விழாக்களை நடத்தி தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.
ரணில் , ஜனாதிபதி வேட்பாளராக ஆனதோடு மொட்டு கட்சி அலைபோல இருந்த விழுதுகள் அனைத்தும் ரணிலை நோக்கி செல்ல தொடங்கிவிட்டன.
அரகலய காலத்தல் ஏற்பட்ட தாக்குதல்கள் மற்றும் தீவைப்புகள் ஆகியவற்றில் இருந்து மொட்டு கட்சியினரை காப்பாற்றியது ரணில் என்பது அனைவருக்கும் தெரியும்.
ரணில் மட்டும் அரசுக்கு தலைமை தாங்காமல் இருந்திருந்தால் நிச்சயமாக படையினரையோ பொலிசாரையோ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நாட்டை அமைதியாக ஆக்கி இருக்க முடியாது.
ஏனைய கட்சி தலைவர்களால் தமது கட்சியையே கட்டுப்படுத்த முடியாமல்இருக்கும்போது, நாட்டை எப்படி கட்டுப்படுத்தி இருப்பார்கள் எனும் கேள்விக்குறி அனேகரது மனதில் எழுகிறது.
இதனால் மொட்டுக் கட்சியினர் தமக்கான பாதுகாப்பை ரணிலிடம் இருந்து மட்டுமே பெற முடியும் என நம்புகின்றனர். அரகலய காலத்தில் ராஜபக்சவினர் அனைவரையும் விட்டுவிட்டு நாட்டை விட்டு தப்பி ஓடியது கடந்த கால சரித்திரம்.
அதன்பின் ராஜபக்சவினரிடம் மக்களுக்கு முன்பிருந்த நம்பிக்கை இல்லாமல் போனது. எனவே நாமல், ஜனாதிபதி வேட்பாளராக நின்றாலும் அவருக்கு ஆதரவளிக்க பெரிதாக எவரும் வரப்போவதில்லை.
இப்போதே மண்டப ஒழுங்குகளை செய்ய ஆட்களை வாடகைக்கு எடுக்க வேண்டிய நிலைக்கு முட்டுக் கட்சி தள்ளப்பட்டுள்ளது.
சில வேளை தம்மிக்க, ரணிலோடு இணைந்து அவருக்கு ஆதரவாக பிரச்சாரங்களில் ஈடுபட்டாலும் வியப்படையே வேண்டியதில்லை. இதுதான் அரசியல் எனவும் அவர் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.