;
Athirady Tamil News

குடும்பத்திற்கு சம்பாதிப்பதற்காக வெளிநாடு சென்ற இளைஞர்.., திரும்பி வந்து பார்க்கையில் ஒருவர் கூட உயிருடன் இல்லை

0

வெளிநாடு சென்று திரும்பிவிட்டு கிராமத்திற்கு திரும்பிய இளைஞர், குடும்பத்தில் ஒருவர் கூட உயிருடன் இல்லை என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்னிக்கை 500யை தாண்ட கூடும் என்று கேரள வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இளைஞர் தவிப்பு
இந்நிலையில் நௌஃபல் என்று இளைஞர் ஒருவர் தன்னுடைய குடும்பத்தினர் அனைவரையும் இழந்து தனியாளாய் நிற்கிறார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் தன்னுடைய கிராமமான முண்டக்கையில் இருந்து ஓமன் சென்றுள்ளார்.

இவர், தனது குடும்பத்திற்கு பணம் சம்பாதிப்பதற்காக வெளிநாடு சென்ற நிலையில், திரும்பி வந்து பார்க்கும் போது குடும்பத்தில் உள்ள ஒருவர் கூட உயிருடன் இல்லை.

இந்த நிலச்சரிவில் தந்தை, தாய், மனைவி, குழந்தைகள், சகோதரன், மைத்துனர் மற்றும் அவர்களது குழந்தைகள் என 11 பேரையும் இழந்து நிற்கிறார்.

மூன்று மாதங்களுக்கு பிறகு வந்து பார்க்கையில் வீடு இருந்த பகுதியில் வெறும் மணல் குவியல்தான் இருக்கிறது. வெளிநாட்டிற்கு செல்லும் போது அவர்களை பார்ப்பது தான் கடைசி என்று நினைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.