புடினைக் காப்பாற்றும்படி அமெரிக்காவிடம் கெஞ்சிய ரஷ்யா: ஒரு சுவாரஸ்ய தகவல்
புடினைக் காப்பாற்றும்படி ரஷ்யா அமெரிக்காவிடம் கெஞ்சியதைக் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
புடினைக் கொல்ல சதி?
முந்தைய ஞாயிற்றுக்கிழமை, அதாவது, ஜூலை மாதம் 28ஆம் திகதி, ரஷ்யாவின் செயின்ட் பீற்றர்ஸ்பர்கில் ரஷ்ய கடற்படை நாள் அணிவகுப்பு நடைபெற்றது.
அந்த அணிவகுப்பின்போது, ரஷ்ய ஜனாதிபதி புடினைக் கொல்ல உக்ரைன் சதி செய்துள்ளதாக ரஷ்ய உளவுத்துறைக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவை நேரடியாக தொடர்புகொண்ட ரஷ்ய அமைச்சர்
அந்த தகவல் கிடைத்ததும், ரஷ்ய வெளியுறவு அமைச்சரான Sergei Ryabkov, அமெரிக்க பாதுகாப்புத்துறைச் செயலரான Lloyd Austinஐ தொலைபேசியில் அழைத்துள்ளார்.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் தன்னை நேரடியாக தொடர்புகொண்டதால் தர்மசங்கடமான நிலைக்கு ஆளாகியுள்ளார். அவரிடம் புடினைக் கொல்ல சதி நடப்பது குறித்து பேசிய Sergei Ryabkov, அப்படி ஒரு சம்பவம் நடந்தால், அது உலகையே குழப்பத்தில் ஆழ்த்திவிடும் என்றும் கூறியுள்ளார்.
அந்த சதி குறித்து அமெரிக்காவுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கக்கூடும் என ரஷ்ய அதிகாரிகள் கருதியதாகவும், அதில் அமெரிக்காவுக்கு நேரடி தொடர்பு இருக்கலாம் என அஞ்சியதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆகவே, உக்ரைனை தடுத்து நிறுத்துமாறு ரஷ்ய தரப்பு அமெரிக்காவை கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால், தங்களுக்கு அப்படி ஒரு தகவல் கிடைக்கவேயில்லை என்றும், தங்களுக்கு புடினுக்கு எதிராக எந்த சதிவேலையிலும் பங்கில்லை என்றும் அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.
உண்மையாகவே உக்ரைன் புடினைக் கொல்ல திட்டமிட்டதா, அமெரிக்கா அதை தடுத்து நிறுத்தியதா என்பதெல்லாம் தெரியவில்லை.
ஆனால், நல்லவேளையாக, ரஷ்ய கடற்படை நாள் அணிவகுப்பு, எந்த அசம்பாவிதமும் இன்றி நல்ல முறையில் நடந்து முடிந்தது.