;
Athirady Tamil News

புதினா டீ குடிப்பதால் உடலுக்கு என்னென்ன பயன் கிடைக்கும் தெரியுமா?

0

புதினாவை நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்க்கின்றோம். ஆனால் இது மருத்துவ குணம் கொண்ட ஒரு மூலிகையாகும். இதில் நீர்ச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம், காபோஷைதிரேற்று, உலோகம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ போன்ற சத்துக்கள் அதிகம் இருக்கினறன.

புதினா சாப்பிடுவதால் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமம் குறையும். இந்த புதினா இலையில் இன்னும் என்ன பல நன்மைகள் இருக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

புதினா டீ
ஒரு இரவு முழுக்க ஒரு கப் தண்ணீரில் புதினா இலைகள் கொஞ்சமாக போட்டு வைத்து அதை காலையில் அவித்து வடிகட்டி ஆறவைத்து வெறுவயிற்றில் குடித்து வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை இந்த இலை அடியோடு விரட்டுகிறது. இதனை நாளாந்தம் நீங்கள் உணவில் சேர்த்துக்கொண்டால் வயிற்று உப்புசம், அஜீரணம், வாயு போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

புதினாவில் இருந்து காதுவலி, வீக்கம், சைனஸ், மூட்டுவலி ஆகியவற்றுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. கோடை காலங்களில் உடல் அதிக உஷ்ணமடைந்து இருக்கும் நேரத்தில் புதினாவை உணவில் சேர்த்துக்கொண்டால் அது உடல் உஷ்னத்தில் இருந்து பாதுகாக்கும்.

தினமும் புதினா டீ குடித்து வந்தால், வாய் துர்நாற்றம் நீங்கும். புதினா இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இது வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அகற்றுகிறது.

நள் முழுக்க வேலை செய்பவர்கள் அதிக பதட்டத்துடன் இருப்பார்கள் இவர்கள் புததினா டீ குடிப்பது மிகவும் முக்கியம். இதனால் உடல் பதட்டம் இல்லாமல் மனம் ஒருநிலைபடும். சளி மற்றும் நெஞ்சு இறுக்கம் ஏற்படும் போது புதினா டீ குடிக்க வேண்டும்.

இது சுவாசக் குழாயைத் திறந்து எளிதாக சுவாசிக்க உதவுகிறது. புதினாவில் இருக்கும் மென்தோல் வயிற்று உப்புசம், அஜீரணம், வாயு போன்ற பிரச்சனைகளை நீக்கும். சாப்பிட்ட பிறகு ஒரு கப் புதினா டீ குடிப்பதால் உணவு எளிதில் ஜீரணமாகும்.

நாம் கடினமான உணவுகளை உண்ட பின்னர் புதினா டீ குடித்தால் அது உணவை ஜீரணமாக்கி குடல் பகுதியை நன்றாக வைத்துக்கொள்ளும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.