தமிழ் பொதுவேட்பாளர் அறிவிப்பு இன்று
தமிழ் பொது வேட்பாளரின் பெயர் இன்றைய தினம் வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
2024 ஆம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் தென் இலங்கையில் இருந்து பல கட்சிகளைச் சார்ந்த சிங்கள வேட்பாளர்கள் தமது கட்டுப்பனத்தினை செலுத்தி உள்ளனர்.
வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் பொது வேட்பாளர் ஒருவரை களம் இறக்குவது பற்றி கடந்த ஆறு மாதமாக பேசப்பட்டு வருகின்றது.
அந்த நிலையில் தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது என்று நாங்கள் அனைவரும் முடிவெடுத்து இருக்கின்றோம்.
அது தொடர்பில் வடக்கிலும் கிழக்கிலும் இருக்கக்கூடிய பல்வேறுபட்ட தரப்புக்களுடனும் பல்வேறுபட்ட தனி நபர்களுடனும் நாங்கள் பேசியிருக்கின்றோம்.
அந்த வகையில் நமது வேட்பாளர் தொடர்பாக நாங்கள் கலந்துரையாடி இரண்டு மூன்று பெயர்களின் பெயர்களை நாங்கள் கூறியிருக்கின்றோம். அதில் ஒருவரை கட்டாயமாக பொது வேட்பாளராக நிறுத்துவோம். நாளைய தினம் பொது வேட்பாளர் யார் என மக்களுக்கு தெரியப்படுத்துவோம்.
தற்போது இரண்டு பேரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது. அதில் எல்லோரும் இணங்க சரியான ஒருவர் தெரிவு செய்யப்படுவர் என தெரிவித்தார்.