;
Athirady Tamil News

நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு

0

நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்ற நிகழ்வுக்கு கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த பெருந்திருவிழா நாளை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவ திருவிழா நடைபெறவுள்ளது. .

கொடியேற்ற நிகழ்வுக்காக கொடிசீலை கையளிக்கும் நிகழ்வை முன்னிட்டு சட்டநாதர் கோவிலை அண்மித்துள்ள வேல் மடம் முருகன் கோவிலில் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, அங்கிருந்து தேரில் கொடிசீலை நல்லூர் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.

படங்கள் – ஐ.சிவசாந்தன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.