;
Athirady Tamil News

கேரளாவில் வயநாட்டில் ஏற்பட்ட நிலை இலங்கையிலும் ஏற்படும் : எச்சரிக்கும் சிறீதரன்

0

கேரள (Kerala) மாநிலத்திலுள்ள வயநாடு (Wayanad) கிராமம் அழிவடைந்ததை போன்று இலங்கையில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பொன்னாவெளி, கௌதாரிமுனை கிராமமும் அழிவடைந்து, இலங்கையின் வரைபடத்தில் இருந்து இல்லாமல் போகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் (S. Sridharan) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பேரழிவை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அவர் விலியுருத்தியுள்ளார்.

குறித்த விடயத்தை நாடாளுமன்றத்தில் நேற்று (07) இடம்பெற்ற அரையாண்டின் அரசிரை நிலைப்பாட்டு அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனிதனின் கண்டுபிடிப்புகள்
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்தியாவின் கேரள மாநிலத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வாழ்ந்த வயநாடு தற்போது காணாமல் போயுள்ளது 500 இற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களை காணவில்லை.

ஒரே இரவில் நடந்த அனர்த்தத்தில் ஒரு ஊரே காணாமல் போயுள்ளதுடன் ஊரை காணவில்லை இங்கிருந்த மக்களை காணவில்லை என கதறி அழுதார்கள் இணையத்தளங்களில் பார்த்தேன் மனிதனின் கண்டுபிடிப்புகள் இங்கே தோற்றுப்போயுள்ளன.

இயற்கை பேரழிவுக்கு முன்னால் மனிதன் மண்டியிட்டு கிடக்கின்றான் என்பதையே இந்த சம்பவம் எமக்கு பாடமாக காட்டியுள்ளது அத்தோடு சாதி மதம் இன்றி ஊர் கடந்து எந்த வேறுபாடுகளும் இன்றி உதவுகின்ற மக்களை பார்க்கின்றோம்.

வயநாடு நிலைமை
முண்டக்கை,சூரல்மலை உள்ளிட்ட சில கிராமங்களையும் காணவில்லை, தாயை காணவில்லை மற்றும் தந்தையை காணவில்லை என்று பிள்ளைகள் கதறுவதை பார்க்கும் போது மனம் வெதும்பியது இது இயற்கை பேரிடராகும்.

இந்த நிலைமைகளை பார்க்கும் போது 2008 மற்றும் 2009 காலப்பகுதியில் எமது மக்கள் முள்ளிவாய்க்காலுக்கு சென்ற போது நேர்ந்தவையே விடயங்களே எனக்கு நினைவுக்கு வந்தது அத்தோட வயநாடு நிலைமை இயற்கையானது ஆனால் இங்கே நடந்தது செயற்கையானது.

மிகப்பெரிய மனித பேரவலத்தை சந்தித்தவர்களாக ஈழத் தமிழர்கள் உள்ளனர் தொடர்ந்தும் இந்த நாட்டில் நடக்கும் விடயங்களை கூறாமல் இருக்க முடியாது தீர்வு காண்போம் ஒற்றுமையாக இருப்போம் என்றெல்லாம் வெறும் வாய் பேச்சாகவே கூறுகின்றனர் இதேவேளை கிளிநொச்சி பூனகரி பிரதேச செயலாளர் பிரிவில் பொன்னாவெலியில் உள்ள முருங்கை கற்களை தோண்டியெடுக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது.

பாதுகாக்க நடவடிக்கை
தமிழ் அமைச்சர் ஒருவர் அந்தக் கற்களை தோண்டியெடுப்பதில் கவனமாக இருக்கின்றார் இயற்கையின் அனர்த்தம் ஆரம்பிக்கின்றது கேரளா வயநாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்தை செயற்கையாக செய்வதற்கு இந்த அமைச்சரும் அரசாங்கமும் பொன்னாவெளி கிராமத்தில் காத்திருக்கின்றனர்.

அதனை அண்மித்த கிராமங்களில் உள்ள மக்கள் அந்த முருங்கைக் கற்களை பாதுகாப்பதற்காக போராடுகின்றனர் ஒரு வருடம் கடந்தும் அது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை அதேவேளை கௌதாரிமுனையில் மக்கள் ஆறு வருடங்களுக்கு முன்னர் மக்கள் போராடினர்.

மண் மேடுகளை அள்ள வேண்டாம் என்றும் கோரினர் அந்த பிரதேசத்தை வரைபடத்தில் இருந்தே இல்லாமல் போகுமளவுக்கு நீதித்துறையே அனுமதி வழங்கியுள்ளதென்றால் நீதி தராசு எங்குள்ளது என்பதை புரிந்துகொள்ளலாம்.

இயற்கையை காப்பாற்ற மக்கள் போராடினர் இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் பொன்னாவெளி கிராமமும் மற்றும் கௌதாரிமுனை கிராமமும் இலங்கையின் வரைபடத்தில் இருந்தே காணாமல் போகப் போகின்றது இந்த இரண்டு கிராமங்களையும் காப்பாற்ற வேண்டும் அங்குள்ள இயற்கைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இங்கேயும் ஒரு வயநாடு உருவாகி விடக்கூடாது என்று உயரிய சபையில் வலியுறுத்துகின்றேன்”என அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.