உக்ரைனின் அதிரடியால் கடும் அச்சத்தில் புடின் : அவசரகாலநிலை பிரகடனம்
ரஷ்யாவிற்குள்(russia) சுமார் 15 கிலோ மீற்றர் வரை ஊடுவியுள்ள உக்ரைன்(ukraine) படையினர் அப்பகுதியிலுள்ள அணு உலையை கைப்பற்றலாம் என்ற தகவல் வெளியாகிய நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் (vladimir putin) கடும் அச்சத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் 300 படைவீரர்களையும், 11 கவச வாகனங்களையும், 20 கவச தாக்குதல் வாகனங்களையும் வடகிழக்கு எல்லையைத் தாண்டி ரஷ்யாவுக்குள் அனுப்பியுள்ளதாக ரஷ்ய இராணுவமும் தெரிவித்துள்ளது.
அவசர காலநிலை பிரகடனம்
ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் உக்ரைன் படையினரின் எல்லை தாண்டிய தாக்குதல் புதன்கிழமையும் தொடர்ந்ததால் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய பிராந்திய ஆளுநர் அலெக்ஸி ஸ்மிர்னோவ், “எதிரி படைகள் பிராந்தியத்திற்குள் வருவதால் ஏற்படும் விளைவுகளை அகற்ற” இந்த நடவடிக்கை அவசியம் என்றார்.
ஊடுருவல் தொடங்கியதில் இருந்து குறைந்தது ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 31 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் ஆறு குழந்தைகள் என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊடுருவிய உக்ரைன் படையினர்
செவ்வாயன்று காலை, 1,000 உக்ரைனிய படையினர், அத்துடன் 11 டாங்கிகள் மற்றும் 20 க்கும் மேற்பட்ட கவச போர் வாகனங்கள், சுட்ஜா நகருக்கு அருகில் ரஷ்யாவுக்குள் நுழைந்ததாக மொஸ்கோ தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை முழுவதும் பல கிராமங்களில் சண்டை நடந்ததாகக் கூறப்படுகிறது, உள்ளூர் அதிகாரிகள் குடியிருப்பாளர்களை தங்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தினர் மற்றும் அனைத்து பொது நிகழ்வுகளும் இரத்து செய்யப்பட்டன.
புடினுக்கு அச்சம்
நேற்று (07)புதன்கிழமை அரசாங்க அதிகாரிகளுடனான ஒரு தொலைக்காட்சி சந்திப்பில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைன் “பெரிய ஆத்திரமூட்டல்” மற்றும் “கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு” நடத்துவதாக குற்றம் சாட்டினார்.
இதேவேளை, உக்ரைன் படைவீரர்கள், Kursk அணு உலையை கைப்பற்றக்கூடும் என அஞ்சப்படுகிறது. அப்படி அந்த அணு உலையை உக்ரைன் படைவீரர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, உக்ரைனுக்குச் சொந்தமான Zaporizhzhia அணு உலையை தங்களிடம் ஒப்படைக்குமாறு மிரட்டலாம் (nuclear blackmail) என புடினுக்கு அச்சம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.