ஜேர்மனியில் வீடுகளில் தீ, நான்கு பெண்கள் உயிரிழப்பு: கொலை செய்ததாக மருத்துவர் கைது
ஜேர்மனியில் நான்கு நோயாளிகளைக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீடுகளில் தீ, நான்கு பெண்கள் உயிரிழப்பு
ஜூன் மாதம் 11ஆம் திகதி, ஜேர்மனியிலுள்ள வீடு ஒன்றில் தீப்பற்றியதாக தகவல் கிடைத்ததன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்துள்ளார்கள்.
அந்த வீட்டுக்குள் 87 வயது பெண்ணொருவர் சுயநினைவற்றுக் கிடந்திருக்கிறார். அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டார்.
ஜூன் மாதம் 8ஆம் திகதி, தன் நோயாளியான 76 வயது பெண் ஒருவரைக் கொன்ற 39 வயது மருத்துவர் ஒருவர், அவரது வீட்டுக்குத் தீவைத்துள்ளார்.
பின்னர், அந்தப் பெண்ணின் உறவினரை தொலைபேசியில் அழைத்த அந்த மருத்துவர், தான் அந்த வீட்டின் வாசலில் நிற்பதாகவும், தான் அழைப்பு மணியை ஒலிக்கச் செய்தும் யாரும் பதிலளிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதேபோல, 72 மற்றும் 94 வயதுடைய மேலும் இரண்டு பேரும் உயிரிழக்க, இந்த சம்பவங்களின் பின்னணியில் அந்த மருத்துவர் இருப்பதாக பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஆகவே, அவரை பொலிசார் கைது செய்துள்ளார்கள். அவர் எதற்காக இப்படி தன் நோயாளிகளைக் கொன்றுவிட்டு அவர்களுடைய வீடுகளுக்குத் தீவைத்தார் என்பது தெரியவில்லை.