மது உற்பத்திகளின் விலையை குறைக்குமாறு விடுத்தக் கோரிக்கைக்கு எதிர்ப்பு
மதுபான நிறுவனங்கள் தமது உற்பத்தி பொருட்களின் விலையை குறைக்குமாறு மதுவரித் திணைக்களம் அண்மையில் விடுத்த கோரிக்கை குறிப்பிடத்தக்க விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை, மது அருந்துவதை ஊக்குவிப்பதாகக் சுகாதார வல்லுநர்கள் கண்டித்துள்ளனர்.
மதுவரித்திணைக்களம்
இது தொடர்பில் கருத்துரைத்துள்ள மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சம்பத் டி சேரம், மதுவரி ஆணையாளர், அரசாங்கத்திற்கு வர வேண்டிய நிலுவைத் தொகையை மீட்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
மாறாக, நிறுவனங்களின் உற்பத்தி விலை குறைத்து மது அருந்துவதை அதிகரிப்பதில் அல்ல என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மதுபான நிறுவனங்களிடம் இருந்து பலகோடி ரூபாய் நிலுவைத் தொகையை மதுவரித்திணைக்களம் வசூலிக்கவில்லை என டி. சேரம் தெரிவித்துள்ளார்.
2024 ஜூன் 30 நிலவரப்படி, திறமையின்மை மற்றும் மதுபான நிறுவனங்களுக்கு சாதகமான வரிவிதிப்பு காரணமாக, மதுவரித்துறை நிலுவையில் உள்ள வரிகளில் 1.8 பில்லியன் ரூபாய்களை இழந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.