ஹனியே கொலைக்கு சாத்தியமே இல்லை: இஸ்ரேலின் முக்கிய ஆதரவாளரை குறிவைத்துள்ள ஈரான்
ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவரான இஸ்மாயில் ஹனியேவின் (Ismail Haniyeh) கொலையை அமெரிக்க (US) ஆதரவின்றி இஸ்ரேலால் (Israel) செய்திருக்க முடியாது என ஈரானின் வெளியுறவு அமைச்சர் அலி பாகேரி கனி (Ali Bagheri) தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் அமைப்பின் அமைப்பின் முன்னாள் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானின் (Iran) தெஹ்ரான் நகரில் நடந்த ஈரான் ஜனாதிபதி மசூத் பெஜஷ்கியானின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள சென்ற போது படுகொலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில், ஹனியேவின் கொலைக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமினி, இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை நடத்தும்படி அந்நாட்டு படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
வலுகட்டாய தாக்குதல்
இதன் படி, ஹனியேவின் படுகொலை மற்றும் பிற விசயங்களை தொடர்பில், சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் ஈரானின் வெளியுறவு அமைச்சர் அலி பாகேரி கனி ஆகியோர் கலந்துரையாடி உள்ளனர்.
அதன் போது பேசிய கனி, “ஹமாஸ் அமைப்பு தலைவரின் படுகொலை, இஸ்ரேலின் பயங்கரவாத குற்றங்களில் ஒன்று. ஈரானின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு எதிராக, மக்கள் மற்றும் சட்டங்களை மதிக்காமல் மேற்கொள்ளப்பட்ட வலுகட்டாய தாக்குதல் ஆகும்.
இஸ்ரேலின் முக்கிய ஆதரவாளர்
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், இஸ்ரேலை இந்த விதிமீறல்களுக்கு பொறுப்பேற்கும்படி செய்ய வேண்டும். இதற்கு பொறுப்பானவர்களை விசாரணைக்கு கொண்டு வந்து, தண்டிக்க வேண்டும்.
இந்த கொடூர குற்றத்தில், இஸ்ரேலின் முக்கிய ஆதரவாளரான அமெரிக்காவும் பொறுப்பேற்க வேண்டிய நாடாக உள்ளது. அதனை நாம் மறந்து விட்டு சென்று விட முடியாது.
அமெரிக்காவின் அனுமதியின்றி, அவர்களுடைய உளவு துறையின் ஆதரவின்றி இந்த அத்துமீறிய தாக்குதல் சாத்தியமில்லை.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் முறையான நடவடிக்கை இல்லையென்றால், இஸ்ரேலின் அத்துமீறலை எதிர்கொள்ள, சுயபாதுகாப்பை சட்டரீதியாக பயன்படுத்துவது தவிர ஈரானுக்கு வேறு வழியெதுவும் இல்லை.” என தெரிவித்துள்ளார்.