பங்களாதேஷ் திரும்பவுள்ள ஷேக் ஹசீனா: மகன் சஜீப் வசீத் வெளியிட்டுள்ள தகவல்
பங்களாதேஷில்(Bangladesh) மீண்டும் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டதும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா( Sheikh Hasina) நாடு திரும்புவார் என அவரின் மகன் சஜீப் வசீத்(Sajeeb Wazed) தெரிவித்துள்ளார்.
இதனை அவர் சமூக வலைதளங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.
எனினும், அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவாரா இல்லையா என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு திரும்பவுள்ள ஷேக் ஹசீனா
பங்களாதேஷில் நடக்கும் போராட்டத்தின் பின்னணியில் பாகிஸ்தானின் உளவு அமைப்புகள் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், பாகிஸ்தானின்(Pakistan) ஐ. எஸ் புலனாய்வுப் பிரிவு இதில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷில் வன்முறை வெடித்து பிரதமர் ஷேக் ஹசீனா( Sheikh Hasina) பதவி விலக கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்த பதவி விலகிய பிரதமர் அந்நாட்டிலிருந்து வெளியேறினார்.
இதனை தொடர்ந்து பதவி விலகல் செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ள பங்களாதேஷ் பிரதமர் ஹேக் ஹசீனா (Sheikh Hasina) மீண்டும் அரசியலில் ஈடுபட மாட்டார் என அவரது மகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.