ஜேர்மன் குடியுரிமை விதிகள் நெகிழ்த்தப்பட்ட பின்னரும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தயங்கும் சில நாட்டு மக்கள்
ஜேர்மனி, குடியுரிமை விதிகளில் பல நல்ல மாற்றங்கள் செய்துள்ளது அனைவரும் அறிந்ததே. அவற்றில் ஒன்று, இரட்டைக் குடியுரிமை வழங்குவதாகும்.
அதாவது, வெளிநாட்டவர்கள் ஜேர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பித்தாலும், அவர்கள் தங்கள் சொந்த நாட்டின் குடியுரிமையைத் துறக்கவேண்டியதில்லை.
தயக்கம் காட்டும் சில நாட்டு மக்கள்
இப்படி ஜேர்மனி இரட்டைக் குடியுரிமை வழங்கினாலும்கூட, சில நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெற தயங்குவதைக் குறித்த ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
குறிப்பாக, ஜேர்மனியில் வாழும் ஆஸ்திரியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஜேர்மன் குடியுரிமை பெறத் தயங்குகிறார்கள்.
காரணம் என்ன?
இந்தியாவைப் பொருத்தவரை, அந்நாட்டு மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட குடியுரிமைகள் வைத்திருக்க அனுமதி இல்லை.அதாவது, இந்தியர்களுக்கு இரட்டைக் குடியுரிமைக்கு அனுமதி இல்லை.
வெளிநாடொன்றில் குடியுரிமை பெறும் இந்தியர்கள், தங்கள் இந்திய பாஸ்போர்ட்டை அந்த வெளிநாட்டிலேயே உள்ள இந்திய தூதரகத்தில் உடனடியாக ஒப்படைக்கவேண்டும் என்பது இந்திய சட்டம்.
ஆக, ஜேர்மன் குடியுரிமை விதிகள் நெகிழ்த்தப்பட்டாலும், இந்தியா மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அதனால் பலன் எதுவும் இல்லை.