வங்கியில் மட்டும் ரூ.2600 கோடி – இந்தியாவின் இந்த பணக்கார கிராமம் எங்க இருக்கிறது தெரியுமா?
ஒரு கிராமத்தில் இருக்கும் அனைவருக்குமே பணக்காரர்கள் என்றால் உங்கள் நம்ப முடிகிறது.
பணக்கார கிராமம்
உண்மையில் அப்படி ஒரு கிராமம் இருக்கிறது. இந்தியாவிலேயே பணக்கார கிராமம் இது தானாம். இந்த ஊரில் இருப்பவர்களின் வங்கி கணக்கில் இருக்கும் பணம் மட்டும் சுமார் ரூ.2,650 கோடி என கூறப்படுகிறது. கிட்டத்தட்ட கிராமத்தில் 7,600 குடும்பங்கள் உறுப்பினர்கள் உள்ளார்கள்.
இவர்களுக்கென 17 வங்கிகள் உள்ளன. இவற்றில் தான் இந்த பணம் மொத்தமாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் இருப்பதாக கூறுகிறார் மாவட்ட வங்கி மேலாளர். பல தலைமுறைகளாக மதாபாரில் வசிக்கும் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் உள்ளார்கள்.
இவர்களில் பலரும் வெளிநாடுகளில் தங்கியிருந்தது தங்களது வருமானத்தை வங்கிகளில் முதலீடு செய்து வருகிறார்கள்.குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள மாதப்பூர் என்ற கிராமம் தான் அது.
அப்படி என்றால் இந்த கிராமத்தில் ஏழ்மையையே இல்லையா? என உங்களுக்கு இயல்பாக கேள்வி எழலாம்.
ஆனாலும் ஏழ்மை
ஆனால், அவ்வாறு இல்லை. இங்கும் ஏழைகள் உள்ளார்கள். மதாபாரின் நவாஸ், ஜூனாவாஸ் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொகை என்பது சுமார் 50 ஆயிரமாக இருக்கும் என கூறப்படும் நிலையில், இக்கிராமத்தில் இன்று 1,711 குடும்பங்கள் வறுமைக் கோட்டின் கீழ் இருக்கிறார்கள் என்பதும் கூடுதல் தகவல்.
அது எவ்வாறு இந்த ஊரிலும் ஏழைகள் இருக்கிறார்கள் என்ற கேள்வி வருமே ஆயின் அதற்கான பதிலும் ஊர் தலைவரிடம் இருக்கிறது. மாதப்பூரில் தலைமுறை தலைமுறையாக வாழ்பவர்களே பணக்காரர்களாக இருக்கிறார்கள்.
கிராமத்தின் வளர்ச்சியை வைத்து இங்கு அருகே அருகே இருக்கும் பல கிராமங்களை சேர்ந்தவர்களும் குடிபெயர்ந்து வருகிறார்களாம். அவர்களில் தான் இந்த ஏழைகளும் இருக்கிறார்கள் என்கிறார் கிராமத்தின் தலைவர் அர்ஜன் ஃபுடியா தெரிவித்துள்ளார்.