ஹிஜாப்பை கழற்ற மறுத்த பள்ளி மாணவிகள் – உபியில் நடந்த சம்பவம்!
உபி-யில் பள்ளிக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதிமறுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹிஜாப்
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் பில்ஹர்இண்டர் காலேஜ் எனும் பெயரில் ஒரு தனியார் மேல் நிலைப்பள்ளியில் 6 முதல் 12 வரையிலான வகுப்புகள் செயல்பட்டு வருகிறது.இந்த நிலையில் நேற்று காலை பள்ளிக்கு வந்த 4 முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர்.
இதனால் இவர்கள் நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டு, சீருடை அணிந்து வரும்படி அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த 4 மாணவிகள் பள்ளி முதல்வர் அறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அனுமதி மறுப்பு
அப்போது கல்லூரி ஒன்று, மாணவ, மாணவிகள் மத அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையில் ஆடைகள் அணிவதற்கு கடந்த மே மாதம் தடை விதித்தது. இதன்படி, முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப், பர்தா உள்ளிட்ட ஆடைகளை கல்லூரிக்குள் அணிந்து வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக பள்ளி மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் அறிவுறுத்தினார்.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த மாணவிகள் பள்ளியிலிருந்து வெளியேறினர்.மேலும் இந்த சம்பவம் கான்பூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.