;
Athirady Tamil News

தவெக கட்சியின் 3 விதமான கொடிகள் தயார்.., மாநாட்டில் விருந்தளிக்கும் விஜய்

0

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் 3 விதமான கொடிகள் தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல் அரசியல் மாநாடு
கட்சியின் கொள்கைகளை கொண்டு செல்வதற்காக தமிழக வெற்றிக் கழகம் பிரம்மாண்டமாக மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளது.

தற்போது திருச்சி மாவட்டத்தில் நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

அந்தவகையில், திருச்சி பொன்மலை ஜி-கார்னர் திடலில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை செப்டம்பர் 25ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக கட்சியின் 3 விதமான கொடிகள் தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்சி கொடிகள்
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி செப்டம்பர் மாதம் வெளியிடப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் கொடிகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் 3 கொடிகள் வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதில் எந்தக் கொடியை பயன்படுத்துவது என்பது பற்றி விஜய் தான் முடிவெடுப்பார் என தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கட்சி நிர்வாகிகளுக்கான பதவிகள் மற்றும் பொறுப்புகள் குறித்தும் இந்த மாநாட்டில் அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.