மகன் போட்டியிடுவதை யார் எதிர்ப்பார்கள்..! கேட்கிறார் மகிந்த
எனது மகன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை யார் எதிர்ப்பார்கள் என முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksa) கேள்வியெழுப்பியுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளராக, கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க தனது மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(namal rajapaksa) தெரிவு செய்யப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எங்கள் மகன் போட்டியிடுவதை யார் எதிர்ப்பார்கள்
மகிந்த ராஜபக்ச தனது மகனின் வேட்புமனுவை ஏற்கவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
“எங்கள் மகன் போட்டியிடுவதை யார் எதிர்ப்பார்கள் நான் விரும்பியதால் அவரை முன்வைத்தேன். ஏனெனில் கட்சி அவரை விரும்பியது” என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டுவார்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டுவார் என நம்புவதாக மகிந்த மேலும் தெரிவித்தார்