உக்ரைனின் திடீர் பாய்ச்சல்… பதிலடிக்கு தடுமாறும் விளாடிமிர் புடின்
ரஷ்யாவுக்குள் அதிரடியாக புகுந்துள்ள உக்ரைன் ராணுவம் முன்னெடுத்த திடீர் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ரஷ்யா தடுமாறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனின் திடீர் பாய்ச்சலை
ரஷ்யாவின் Kursk பிராந்தியத்தில் நுழைந்த உக்ரைன் ராணுவம் நான்காவது நாளாக அங்கே முகாமிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 280 பேர்களை ரஷ்யா இழந்துள்ளது.
மட்டுமின்றி, உக்ரைனின் திடீர் பாய்ச்சலை எதிர்கொண்டு வருவதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளியான தரவுகளின் அடிப்படையில், ரஷ்யாவுக்குள் 6 மைல்கள் தொலைவுக்கு உக்ரைன் ராணுவம் புகுந்துள்ளதாகவே கூறப்படுகிறது.
2022 பிப்ரவரி மாதம் ரஷ்யா முன்னெடுத்த படையெடுப்புக்கு பிறகு, முதல் முறையாக உக்ரைனின் அதிரடி நடவடிக்கை இதுவென்றே கூறுகின்றனர். ஆனால் உக்ரைன் இதுவரை வெளிப்படையாக இதை ஒப்புக்கொள்ளவில்லை.
இருப்பினும், வியாழக்கிழமை கருத்து தெரிவித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, படையெடுப்பின் பின்விளைவுகளை ரஷ்யா கண்டிப்பாக உணர வேண்டும் என்றார்.
Kursk பிராந்தியத்தில் நடக்கும் போரானது ரஷ்ய அணுமின் நிலையத்திற்கு மிக அருகாமையிலேயே முன்னெடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அணுமின் நிலையத்தை பாதுகாக்க வாக்னர் படைகளை அனுப்பி வைத்துள்ளதாக ரஷ்ய தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா அவசர நிலை பிரகடனம்
மேலும், Kursk பிராந்தியத்தில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். இதனிடையே, ராணுவ கிடங்கு ஒன்றை மொத்தமாக அழித்துள்ளதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.
தங்கள் நாட்டு எல்லையில் இருந்து சுமார் 217 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள Lipetsk விமான தளம் மீதே உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. மட்டுமின்றி, இதுபோன்ற ஒரு தாக்குதலுக்காக உக்ரைன் காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
உக்ரைன் துருப்புகள் உள்ளே நுழைந்ததும், ரஷ்யா அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது. அத்துடன் நான்கு கிராம மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். 1,000 உக்ரேனிய வீரர்கள், டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களின் ஆதரவுடன், குர்ஸ்க் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் தொடங்கியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
பதிலடிக்கு ரஷ்யா தயாரானாலும், உக்ரைன் வீரர்களின் பாய்ச்சலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறி வருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது.