கமலா ஹரிஸா, ட்ரம்பா, ஜேர்மனி மக்கள் ஆதரவு யாருக்கு?
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல், உலக முழுவதிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக பொறுப்பேற்கப் போவது யார் என்பதை அறிய பல நாட்டு மக்களும் ஆர்வமாக உள்ளார்கள்.
அத்துடன், அமெரிக்காவின் ஜனாதிபதியாக யார் வரவேண்டும் என்பது குறித்த கருத்துக் கணிப்புகளும் பல நாடுகளில் நடந்துவருகிறது.
ஜேர்மனி மக்கள் ஆதரவு யாருக்கு?
ஜேர்மனியில், சமீபத்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் கலந்துகொண்ட மக்களில் பெரும்பாலானோர், கமலா ஹரிஸுக்குத்தான் தங்கள் ஆதரவு என்று கூறியுள்ளார்கள்.
ஜேர்மன் ஊடகமான Deutschlandtrend, 1,300 பேரிடம் நடத்திய ஆய்வில், 77 சதவிகிதம் பேர், தங்கள் ஆதரவு கமலா ஹரிஸுக்குதான் என்று கூறியுள்ளார்கள்.
ஜேர்மன் மக்களில் 10 சதவிகிதத்தினர் மட்டுமே, ட்ரம்புக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.