வயநாடு நிலச்சரிவு : பாதிக்கப்பட்ட மக்களை நலம் விசாரித்த பிரதமர்!
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு சூரல்மலையில் உள்ள முகாமில் உள்ளவர்களிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.
வயநாடு
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தொடர்ந்து முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி அட்டமலை, நூல்மலை ஆகிய மலைக் கிராமங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரோடு மண்ணில் புதைந்தனா். இந்த நிலச்சரிவால் 400 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
1200க்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மலைப் பகுதியில் இருந்து பெரிய பாறைகளுடன் மண்ணும் கலந்துவந்த வெள்ளத்தில் சாலைகள், பாலங்கள், வாகனங்கள், மரங்கள் உள்ளிட்டவை முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டன.
சூரல்மலை
தொடர்ந்து ராணுவம், கடற்படை, விமானப் படை, தேசியப் பேரிடா் மீட்புப் படை, கடலோரக் காவல் படை, காவல் துறை, தீயணைப்புத் துறை உள்பட பல்வேறு முகமைகளைச் சோ்ந்தவா்கள் மீட்பு-தேடுதல் பணியில் ஈடுபட்டு சடலங்களை தகனம் செய்தனர். ஆனால் இன்றுவரை 200 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை.
இந்த நிலையில் இந்த நிலையில், பிரதமர் மோடி தனி விமானம் மூலம் கேரள மாநிலம் கண்ணூர் வந்தடைந்தார். அதன் பிறகு வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் ஏற்பட்ட நிகழ்வு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதனை தொடர்ந்து நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு சூரல்மலையில் உள்ள முகாமில் உள்ளவர்களிடம் பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.