இந்தியாவில் நடக்க உள்ள பெரிய சம்பவம்? ஹிண்டன்பர்க் பதிவால் பரபரப்பு
இந்தியா தொடர்பான ஹிண்டன்பர்க் பதிவு உலகளவில் விவாத பொருளாகியுள்ளது.
ஹிண்டன்பர்க்
அமெரிக்காவைச் சேர்ந்த நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் உலக அளவில் பெரு நிறுவனங்களில் நடைபெறும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்கிறது.
ஹிண்டன்பர்க் வெளியிடும் நிறுவனங்களின் மோசடிகள் மற்றும் முறைகேடுகளைக் குறித்த அறிக்கைகள் முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்கு வகிப்பதாக நம்பப்படுகிறது.
எக்ஸ் பதிவு
2023 ம் ஆண்டு ஜனவரி மாதம், அதானி குழுமம் பங்கு மதிப்பை உயர்த்திக் காட்டி, அதன் மூலம் அதிகக் கடன் பெறுதல், போலி நிறுவனங்களைத் தொடங்கி, வரி ஏய்ப்பு செய்தல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் அறிக்கையில் தெரிவித்தது. இந்த அறிக்கை வெளியானதையடுத்து அதானி குழும பங்குகள் சரிவை சந்தித்தது.
ஹிண்டன்பர்க்கின் அறிக்கையில் ஆதாரமற்றவை என்று அதானி குழுமம் மறுத்தது. ஆனால், தங்களது இந்த அறிக்கை தவறு என் கருதினால், அதானி குழுமம் தங்கள் மீது வழக்குத் தொடரலாம் என ஹிண்டன்பர்க் அழைப்பு விடுத்திருந்தது. இது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது.
Something big soon India
— Hindenburg Research (@HindenburgRes) August 10, 2024
இந்நிலையில் ஹிண்டன்பர்க் தனது எக்ஸ் பக்கத்தில், “Something big soon India” என பதிவிட்டுள்ளது உலகளவில் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த ஹிண்டன்பர்க் அறிக்கை யாரை பற்றியதாக இருக்கும் என சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.