நல்லூரில் வீதித்தடைகளை மீறி உள்நுழைந்த பௌத்த பிக்குகளின் வாகனம்
யாழ். நல்லூர் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு ஆலய வீதிகளில் வாகனங்கள் உட்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பௌத்த பிக்குகள் சிலர் வாகனத்துடன் உள்நுழைந்தமை சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
நல்லூர் கந்தசாமி ஆலய மகோற்சவம் இடம்பெற்று வருகின்ற நிலையில் ஆலய வீதிகளில் வாகன போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்டும் தடைவிதிக்கப்பட்டும் காணப்படுகிறது.
நல்லூர் கந்தசாமி ஆலயம்
இந்நிலையில், வீதி தடைகளையும் மீறி நல்லூர் கந்தசாமி ஆலய முன்பக்கம் வரை பிக்குகளின் வாகனம் நுழைய அனுமதிக்கப்பட்டமை சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
மேலும், பொது மக்களின் வாகனங்களை பொலிஸார் திருப்பி அனுப்புகின்ற நிலையில், பிக்குகளின் வாகனத்தை உள்நுழைய அனுமதித்தமை குற்றச்சாட்டுகளை தோற்றுவித்துள்ளது.