;
Athirady Tamil News

சர்வதேச ஒலிம்பிக் குழுவில் உறுப்பினராக தெரிவாகியுள்ள இலங்கை வீரர்

0

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (IOC) விளையாட்டு வீரர்கள் ஆணைக்குழு உறுப்பினராக இலங்கையின் முன்னாள் பெட்மின்டன் வீரர் நிலுக கருணாரத்ன(Niluka karunaratne) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் விளையாட்டு வீரர்கள் ஆணைக்குழுவுக்கு தெரிவான முதலாவது இலங்கை வீரர் இவராவார்.

நிலுக கருணாரத்ன 17 வருடங்கள் தேசிய ஒற்றையர் பெட்மின்டன் சம்பியனாக இருந்ததுடன் பல்வேறு சர்வதேச பெட்மின்டன் போட்டிகளில் வெற்றிகளையும் ஈட்டியுள்ளார்.

ஒலிம்பிக் விளையாட்டு விழா
மேலும், 3 ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களிலும் (2012, 2016, 2020) பங்குபற்றியுள்ளார்.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றிய விளையாட்டு வீர, வீராங்கனைகளால் IOC ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

வாக்களிப்பின் மூலம் புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள சர்வதேச ஒலிம்பிக் பேரவை விளையாட்டு வீரர்கள் ஆணைக்குழு பிறிஸ்பேனில் 2032இல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு விழாவரை 8 வருடங்களுக்கு செயற்படும்.

அங்கீகாரம்
உலகில் உள்ள அனைத்து விளையாட்டு வீரர்களையும் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் விளையாட்டு வீரர்கள் ஆணைக்குழு பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

இக் குழுவில் ஐக்கிய அமெரிக்க ஒலிம்பிக் சம்பியன் அலிசன் பீலிக்ஸ், ஜேர்மனியின் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை கிம் பியூ, அவுஸ்திரேலியாவின் படகோட்ட வீராங்கனனை ஜெசிக்கா பொக்ஸ், நியூஸிலாந்தின் டென்னிஸ் வீரர் மார்க்கஸ் டெனியல் ஆகியோர் முக்கிய நான்கு உறுப்பினர்களாக இடம்பெறுகின்றனர்.

இது தொடர்பில் தெரிவித்துள்ள நிலுக கருணாரத்ன, “விளையாட்டு வீரர்கள் ஆணைக்குழு உறுப்பினராக இலங்கையிலிருந்து தெரிவான முதலாவது நபர் என்ற வகையில் நான் மிகவும் பெருமை அடைகிறேன். இதன் மூலம் இலங்கைக்கு மிகப் பெரிய கௌரவம் கிடைத்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.